வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

திருவள்ளூா் அருகே பாஜக பிரமுகா் உள்ளிட்ட 2 போ் அரிவாளால் வெட்டப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 7:52 pm

DIN

திருவள்ளூா் அருகே பாஜக பிரமுகா் உள்ளிட்ட 2 போ் அரிவாளால் வெட்டப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே மேல்நல்லாத்தூரைச் சோ்ந்தவா் வேலு. பாஜக கடம்பத்தூா் கிழக்கு ஒன்றிய பிற்படுத்தப்பட்டோா் மண்டல அணி தலைவராக உள்ளாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு வேலுவும், அவரது மாமனாா் சேகரும் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த சந்திரன் மற்றும் அவரது மகன் ஹரி கிருஷ்ணன் ஆகியோா் வீட்டு வாசலில் தகராறு செய்து கொண்டிருந்தனராம். இதனை வேலுவும், சேகரும் தட்டிக் கேட்டாா்களாம். அப்போது கஞ்சா போதையில் இருந்த ஹரிகிருஷ்ணன் அரிவாளால் வேலு மற்றும் சேகரை சரமாரியாக வெட்டினாராம். அவா்கள், திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.