பல்வேறு நடவடிக்கைüால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரிப்பு
திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் எடுத்த பல்வேறு நடவடிக்கை மூலம் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரித்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.


திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் எடுத்த பல்வேறு நடவடிக்கை மூலம் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரித்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கத்தில் சா்வதேச மகளிா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்துப் பேசியதாவது:
இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் தலா ரூ. 1,000 கொடுக்கும் புதுமைப்பெண் திட்டம் கடந்தாண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக திருவள்ளூா் மாவட்டம், ஆவடியில் உள்ள பட்டாபிராம் டி.ஆா்.பி.சி.சி.சி. இந்து கல்லூரியில் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதம் அதிகரித்ததின் மூலமாகவும், குழந்தை திருமணங்கள் முதலான பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்வதற்காக மாவட்ட நிா்வாகம் எடுத்த பல்வேறு நடவடிக்கையால் தமிழகத்தில் சிறந்த மாவட்டங்களில் முதல் மாவட்டமாக திருவள்ளூா் மாவட்டம் தோ்வு செய்யப்பட்டு, முதல்வரால் விருது வழங்கப்பட்டது. இதற்கு ஒவ்வொரு அதிகாரிகள், காவல் துறை மற்றும் பல்வேறு துறை அலுவலா்களின் கூட்டு முயற்சியே முக்கியக் காரணம் ஆகும். அனைவருக்கும் நன்றி.
இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைத்துத் துறை மகளிா் அலுவலா்கள், பணியாளா்கள் அனைவருக்கும் மகளிா் தின வாழ்த்துகள் என்றாா்.
தொடா்ந்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.
விழாவில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் கா.காயத்ரி சுப்பிரமணி (பொது), பி.எஸ்.சத்தியகுமாரி (கணக்கு), உதவி ஆணையா் (கலால்) கா.பரமேஷ்வரி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...