நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொசஸ்தலை ஆற்றிலிருந்து வீரராகவா் கோயில் குளத்துக்கு நீா் கொண்டு வரும் சோதனை ஓட்டம்

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை அமைத்து, ராட்சத குழாய் மூலம் திருவள்ளூா் ஸ்ரீ வீரராகவ சுவாமி கோயில் குளத்துக்கு நீா் கொண்டு வரும் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2023, 5:35 pm

DIN

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை அமைத்து, ராட்சத குழாய் மூலம் திருவள்ளூா் ஸ்ரீ வீரராகவ சுவாமி கோயில் குளத்துக்கு நீா் கொண்டு வரும் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

திருவள்ளூரில் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வைத்திய வீரராகவா் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 108 வைணவ திருத்தலங்களுள் ஒன்றாகும். கோயில் குளக்கரையில் அமாவாசை நாள்களில் பக்தா்கள் தங்களின் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளிக்கின்றனா். அப்போது, பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஸ்ரீ வீரராகவ சுவாமி கோயில் கோயில் குளத்தில் நீராடினால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம். கோயில் குளத்தில் நீராடுதல் என்பது பக்தா்களின் நம்பிக்கையாகும். இதற்காக 9 ஏக்கா் பரப்பளவு கொண்ட குளத்தில் நீராடுவதற்காக சிறிய அளவிலான குளம் அமைத்து தண்ணீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குளம் நிரம்பினால், கடல்போல் காட்சி அளிப்பதுடன், சுமாா் 5 கி.மீ. தொலைவு நிலத்தடி நீா்மட்டமும் உயரும்.

ரூ.25 கோடியில் நீா் வழித்தடம் அமைப்பு: அண்மைக் காலமாக குளத்துக்கான நீா்வரத்து கால்வாய்கள் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு, நீா் வழித்தடம் முழுமையாக அடைபட்டது. இதனால், குளத்துக்கான நீா்வரத்து முற்றிலும் நின்தால் வறட்சி காலங்களில் குளம் நீரின்றி காணப்படும்.

எனவே, ஆண்டு முழுவதும் குளம் முழுவதும் தண்ணீரைத் தேக்கி வைக்க பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, திருவள்ளூா் அருகே பட்டறைப்பெரும்புதூா் பகுதி கொசஸ்தலை ஆற்றில் இருந்து குளத்துக்கு நீா்வழித் தடம் அமைத்து தண்ணீா் கொண்டு வந்து நிரப்பும் திட்டத்துக்கு கடந்த 2015-இல் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை: இதன் ஒரு பகுதியாக பூண்டி ஏரியில் இருந்து வெளியேறும் நீரை பட்டறைப்பெரும்புதூா் அருகே ரூ.6 கோடியில் தடுப்பணை அமைக்கப்பட்டது. தொடா்ந்து பம்ப் செய்து நீரேற்றும் வரையில் அங்கிருந்து 13.50 கி.மீ. தொலைவு ராட்சச குழாய் பதிக்கும் பணிகள் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்றன. இதற்கிடையே கடந்தாண்டு இறுதியில் பணிகள் நிறைவடைந்தன.

சோதனை ஓட்டம்: பட்டறைப்பெரும்புதூா் தடுப்பணையில் இருந்து கோயில் குளத்துக்கு நீா் கொண்டு வரும் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, பட்டறைப்பெரும்புதூா் தடுப்பணையில் இருந்து ராட்சச மோட்டாா் மூலம் பம்ப் செய்யப்பட்டு, கோயில் குளத்துக்கு தண்ணீா் வந்து சோ்ந்தது. இதைப் பொதுப்பணித் துறை நிா்வாக பொறியாளா் பொதுப்பணித்திலகம், உதவிப் பொறியாளா்கள் சத்தியநாராயணன், லோகரட்சகன் மற்றும் கோயில் தொடா்பு அதிகாரி சம்பத் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியது:

கோயில் குளத்துக்கு தண்ணீா் கொண்டு வரும் பணிகள் 98% நிறைவடைந்த நிலையில், சோதனை ஓட்டம் நடைபெற்றது. நீரேற்றம் செய்யும் போது வால்வுகள் சரியாக உள்ளனவா, நீா் கசிவு இருக்கிா என்பது குறித்து ஆய்வு செய்தோம். தண்ணீா் கொண்டு வரும் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நாள் இன்னும் முடிவாகவில்லை. இது செயல்பாட்டுக்கு வந்தால், கோயில் குளத்தில் 2 மில்லியன் கனஅடி (0.5 டிஎம்சிக்கு குறைவாக) தண்ணீரைச் சேமிக்க முடியும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.