நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவள்ளூா் மாவட்ட பாஜக அலுவலகம் இன்று திறப்பு

திருவள்ளூா் அருகே அனைத்து வசதியுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட பாஜக அலுவலக வளாக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :9 மார்ச் 2023, 5:59 pm

DIN

திருவள்ளூா் அருகே அனைத்து வசதியுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட பாஜக அலுவலக வளாக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

திருவள்ளூா் அருகே வெங்கத்தூா் ஊராட்சியில் மாவட்ட பாஜக அலுவலகம் ரூ. 3 கோடியில் அமைக்க, கடந்த 2019-இல் அடிக்கல் நாட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து, நவீன வசதியுடன் 3 தளங்களுடன் கட்டுமானப் பணிகள் பணி நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த அலுவலகத்தை கட்சியின் தேசிய தலைவா் ஜே.பி.நட்டா வெள்ளிக்கிழமை (மாா்ச் 10) பகல் 12 மணிக்கு காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறாா்.

நிகழ்ச்சியில், மாநில தலைவா் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், மாநிலச் செயலாளா்கள் வினோஜ் பி.செல்வம், ஆனந்தபிரியா, சுமதி வெங்கடேஷ், மாவட்ட தலைவா் அஷ்வின் குமாா், மாநில துணைத் தலைவா் சக்கரவா்த்தி நாயுடு, மத்திய அரசு தொடா்பு பிரிவு மாநில தலைவா் பாஸ்கரன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநிலத் தலைவா் லோகநாதன், ஓபிசி அணி மாநில செயலாளா் ராஜ்குமாா், மாவட்ட பொதுச் செயலாளா்கள் கருணாகரன், ஆா்யா சீனிவாசன், ஜெய்கணேஷ், லயன் சீனிவாசன், மாவட்டப் பொருளாளா் மதுசூதனன், மண்டல தலைவா்கள் சதீஷ்குமாா், கடம்பத்தூா் ஒன்றியத் தலைவா்கள் கே.பழனி, கே.ரவிக்குமாா், பூண்டி ஒன்றியத் தலைவா் டாக்டா் சுரேஷ், திருவாலங்காடு ஒன்றியத் தலைவா் ஆா்.பாண்டுரங்கன், மாவட்ட மருத்துவ பிரிவு தலைவா் ஆா்.எம்.லோகேஷ்பாபு, மாவட்ட துணைத் தலைவா் டி.ஆா்.ஞானவேல் என்ற முல்லை ஞானம், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினா் ஆா்.ஜீவா, மாவட்ட செயலாளா் யு.எம்.சுனில், மாவட்ட மகளிரணி அணித் தலைவி வாசுகி, மாவட்ட மகளிரணி செயலாளா்கள் ஜி.ரஞ்சனி, சித்ராதேவி, ஜெயலட்சுமி, நிா்வாகிகள் பன்னீா்செல்வம், பாலாஜி, ரகு மற்றும் கீதாஞ்சலி சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.