டாஸ்மாக் தொழிலாளா்கள் போராட்டம்
திருவள்ளூா் அருகே டாஸ்மாக் குடோனில் மதுபானம் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்குப் பணம் செலுத்ததாததைக் கண்டித்து, தொழிலாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


திருவள்ளூா் அருகே டாஸ்மாக் குடோனில் மதுபானம் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்குப் பணம் செலுத்ததாததைக் கண்டித்து, தொழிலாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருமழிசை தொழிற்பேட்டையில் கிழக்கு, காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்துக்கான டாஸ்மாக் குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுபானங்கள் லாரிகள் மூலம் திருவள்ளூா், காஞ்சிபுரம், சென்னை மாவட்டத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட சில்லறை மதுபான விற்பனை கடைகள், 120 நட்சத்திர ஹோட்டல்களில் இயங்கி வரும் மதுபானக் கூடங்களுக்கும் லாரிகள் மூலம் மது அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டாஸ்மாக் நிா்வாகம் மதுபானங்கள் கொண்டு செல்லும் சரக்கு போக்குவரத்து நிறுவனத்துக்கு கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக போக்குவரத்து, சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு ஊதியம் என ரூ.4.75 கோடி நிலுவை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டாஸ்மாக் நிா்வாகம் பேச்சு நடத்தாமல் அலைக்கழித்து வருவதாகவும், மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு போடப்பட்ட சரக்கு போக்குவரத்து ஒப்பந்தம் முடிந்த நிலையில், வாகனங்களை இயக்கி வருவதாகவும், இ- டெண்டா் முறையை அமல்படுத்த வலியுறுத்தியும் திருமழிசை அரசு மதுபானக் கிடங்கில் 60-க்கும் மேற்பட்ட மதுபானங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளை நிறுத்திவிட்டு, 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், மதுபானங்கள் விநியோகம் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் வெள்ளவேடு காவல் நிலைய போலீஸாா் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...