பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருட்டு

பொன்னேரி அடுத்த விவசாயி வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை, 250 கிராம் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 8:08 pm

DIN

பொன்னேரி: பொன்னேரி அடுத்த விவசாயி வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை, 250 கிராம் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பொன்னேரி வட்டம், திருப்பாலைவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்மாளமடம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருப்பவா் ரவி (55). விவசாயி. இவரது மருத்துவமனையில் உள்ள தனது உறவினரை உடனிருந்து கவனிக்க சென்னைக்கு சென்றாா்.

கடந்த மாதம் 14-ஆம் தேதி வீட்டைப் பூட்டிக்கொண்டு சென்ற நிலையில், ரவி ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டுக்கு வந்தாா்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 18 பவுன் நகை, 250 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ. 25,000 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.