மும்பையின் முக்கிய இடங்களுக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் பெறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சட்டமன்ற வளாகமான விதான் பவன் மற்றும் உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகின்றது.
அங்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், சட்டமன்ற வளாகத்திலிருந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் வளாகம் முழுவதும் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உயர் நீதிமன்றத்திலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு சோதனைகள் முடிந்ததும் இரு அவைகளின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சட்டமன்றக் குழுத் தலைவர் ராம் ஷிண்டே, ”விதான் பவன், மும்பை உயர் நீதிமன்றம், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ஒரு வங்கி உள்ளிட்ட பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக மின்னஞ்சல் செய்தி கிடைக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
மேலும், இந்தியா முழுவதும் இதுபோன்ற போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
A bomb threat was received via email this morning at key locations in Mumbai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மின்னஞ்சல் மூலம் 3 ஆண்டுகளாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மென்பொறியாளா் கைது!

மும்பையில் கனமழை: 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி!

கண்ணூர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை

தில்லி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai




