அமெரிக்கா, இஸ்ரேலுடனான போரை நிறுத்த மூன்று நிபந்தனைகளை ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் வியாழக்கிழமை விதித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்க வேண்டும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களை ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட நோக்கங்களுடன் அந்நாடு மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது. அந்தப் பிராந்தியத்தில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலும் அமெரிக்காவுடன் சோ்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், தனது அண்டை நாடுகளான சவூதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோா்டான் உள்ளிட்டவற்றில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், வாஷிங்டனில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “ஈரானுடனான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டது. இனி தாக்கி அழிப்பதற்கு ஈரானில் இலக்குகள் எதுவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் போரை நிறுத்துவேன்” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், அமெரிக்காவுடனான போரை நிறுத்துவதற்கு 3 நிபந்தனைகளை ஈரான் அதிபர் விதித்துள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ரஷியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் நான் ஆலோசனை நடத்தினேன். மத்திய கிழக்கில் அமைதிக்கான எனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினேன்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்ட இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழி, ஈரானின் சட்டப்பூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பது, உரிய இழப்பீடுகளை வழங்குவது மற்றும் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்த மாட்டோம் என்ற உத்தரவாதங்களை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
Iranian President sets 3 conditions to stop the war!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு!

நாங்கள் டிரம்ப்பை கொல்வோம்! - ஈரானின் பதாகையால் அதிர்ச்சி!

ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு

ஈரான் அதிபருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai




