சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருவள்ளூரில் டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட அனைத்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
திருவள்ளூரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர்.
Updated On :29 ஜனவரி 2024, 7:01 am

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட அனைத்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி சாலை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு அந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் காஞ்சிப்பாடி பி.சரவணன் தலைமை வகித்தார். இதில் அந்தந்த வட்டார சங்க நிர்வாகிகள் மனோகர், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அந்த சங்கத்தின் எம்.சௌக்கார் பாண்டியன் வரவேற்புரை வழங்கினார். 

அப்போது மத்திய அரசின் புதிய சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் உடனே சவுண்டு மணல் குவாரிகளை தொடங்க வேண்டும். வாகனங்களுக்கு ஆன்லைன் பொய் வழக்கு போடக்கூடாது என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் நிறைவாக அந்த சங்கத்தின் பொருளாளர் ஆர்.வெங்கட் நன்றி கூறினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.