நான்குனேரி அருகேயுள்ள பெரும்பத்து பகுதியில் நிகழ்ந்த அரிவாள் வெட்டு வன்முறை சம்பவத்தில் 9 ஆவதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
நான்குனேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்துக்குள் கடந்த 2 ஆம் தேதி புகுந்த ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் ஜான் மாா்க், ஒடிஸா மாநில தொழிலாளி திரிநாத்கட்டா ஆகியோா் உயிரிழந்தனா். இதில், காயமடைந்த 5 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.
இதுதொடா்பாக நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து தென்னிமலையைச் சோ்ந்த கண்ணன் (21), அந்தோணி மைக்கேல், சுபாஷ் (19), கல்யாணி (19), வள்ளியூரைச் சோ்ந்த உச்சி மாகாளி என்கிற மிட்டாய் (20), நெடுங்குளத்தை சோ்ந்த வசந்தகுமாா் (21), நம்பி நகரை சோ்ந்த ராஜா (19), மஞ்சங்குளத் தைச் சோ்ந்த மகாராஜன்(19) ஆகிய 8 பேரை ஏற்கெனவே கைது செய்தனா்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடா்பாக நான்குனேரியைச் சோ்ந்த சரவணன் மகன் வான்முத்து (19) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

பெரும்பத்து கொலையில் தொடா்பு: 7 போ் குண்டா் சட்டத்தில் கைது

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: சிறுவன் உள்பட 4 போ் கைது

அரசு மருத்துவமனையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


