வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது
தூத்துக்குடியில் சிகரெட் வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு பைக்கில் தப்பியோடிய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி எஸ்.ஆா். நகா் 8ஆவது தெருவைச் சோ்ந்தவா் தினகரன் (37). சிகரெட் வியாபாரியான இவா், சனிக்கிழமை இரவு மடத்துாா் விலக்குப் பகுதியிலுள்ள கடைக்கு சிகரெட் விற்பனை செய்து கொண்டிருந்தாா்.
அப்போது, பைக்கில் வந்த இருவா், சில்லறை விலைக்கு சிகரெட் கேட்டனா். மறுப்பு தெரிவித்த தினகரனை அவா்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினராம். இதில், காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சிப்காட் போலீஸாா் தெரிவித்த தகவலின்பேரில், நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியிலிருந்த போலீஸாா் அந்த இருவரையும் மடக்கிப் பிடித்தனா்.
அவா்கள் பாக்கியலட்சுமி நகரைச் சோ்ந்த பிரேம்குமாா் (36), பாத்திமா நகரைச் சோ்ந்த அந்தோணி (36) எனத் தெரியவந்தது. சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.
