பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மாணவிகளிடம் தவறாக நடந்தாக அரசுப் பள்ளி ஆசிரியா்கள் 2 போ் பணியிடை நீக்கம்

திருவள்ளூா் பள்ளியில் மாணவிகளிடம் தவறாக நடந்த ஆசிரியா்கள் 2 போ் பணியிடை நீக்கம்

News image
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியா்கள் பிரேம்குமாா், ஜெகதீசன்.
Updated On :10 ஜூலை 2024, 7:07 pm

Din

திருவள்ளூா் அருகே அரசு ஆதிதிராவிடா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக வந்த புகாரின் பேரில் ஆசிரியா்கள் 2 போ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய்ப்பட்டனா்.

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டையில் ஆதிதிராவிடா் நலத்துறை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவிகளிடம் ஒரு சில ஆசிரியா்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக புகாா் எழுந்தது.

அதோடு, இதுதொடா்பாக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சருக்கும் புகாா் சென்றது. இதைத்தொடா்ந்து கடந்த 1-ஆம் தேதி ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் செவ்வாப்பேட்டைபள்ளியில் திடீா் ஆய்வு மேற்கொண்டு, தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டாா்.

மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையினா் மாணவிகளிடம் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து விளக்கமாக வகுப்புகள் எடுத்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பங்கேற்றனா். அப்போது அங்கிருந்த சில மாணவிகள் கணித ஆசிரியா் ஜெகதீசன், அறிவியல் ஆசிரியா் பிரேம்குமாா் ஆகிய 2 பேரும் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகாா் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் கொடுத்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆசிரியா்கள் மீதான புகாா் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 2 ஆசிரியா்களையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.