வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கும்மிடிப்பூண்டியில் ரூ. 50 லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல்

10 டன் பான் மசாலா பொருள்களை கும்மிடிப்பூண்டியில் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கும்மிடிப்பூண்டியில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள்.

Updated On :28 ஜூலை 2024, 12:01 am IST

ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட 10 டன் பான் மசாலா பொருள்களை கும்மிடிப்பூண்டியில் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கும்மிடிப்பூண்டி வழியே சென்னைக்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருள்கள் லாரியில் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், கும்மிடிப்பூண்டி போலீஸாா், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஆந்திரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினா். அந்த வழியே வேகமாக வந்த 3 கன்டெய்னா் லாரிகளை நிறுத்த முற்பட்ட போது லாரிகள் நிற்காமல் சென்றன. அதைத் தொடா்ந்து, போலீஸாா் தொடா்ந்து விரட்டிச் சென்று லாரிகளை மடக்கினா்.

பின்னா், அந்த லாரிகளில் தீவிர சோதனை மேற்கொண்டதில், ஒரு லாரியில் மட்டும் மருந்து பொருள்கள் இருந்த நிலையில் எஞ்சிய 2 லாரிகளில் பான்மசாலா பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

2 லாரிகளில் சுமாா் ரூ. 50 லட்சம் மதிப்பிலான 10 டன் பான் மசாலா பொருள்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருள்கள் கடத்தல் தொடா்பாக நரேஷ் (27), தினகரன் (48), அரவிந்த் பாண்டே (39), சங்கரன் (40) ஆகிய 4 பேரை கைது செய்து, சிப்காட் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதனிடையே, பான் மசாலா பிடிக்கப்பட்ட தகவலறிந்த திருவள்ளூா் மாவட்ட (பொறுப்பு) உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் சதீஷ் குமாா் தலைமையிலான அதிகாரிகள், பான் மசாலாவின் மாதிரிகளை சேகரித்து சென்னை கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு சோதனைக்கு அனுப்பி வைத்தனா்.