ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கள்ளச்சாராய விற்பனை: இளைஞா் கைது

நெமிலி கிராமத்தில் விற்பனைக்காக வீட்டில் சாராயத்தை பதுக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2024, 8:44 pm

Din

நெமிலி கிராமத்தில் விற்பனைக்காக வீட்டில் சாராயத்தை பதுக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி அடுத்த நெமிலி காலனி பகுதியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ளச் சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.பி. ஸ்ரீநிவாச பெருமாள் உத்தரவின் பேரில் திருவாலங்காடு ஆய்வாளா் ராஜகோபால் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நெமிலி காலனியில் வீடு, வீடாக சோதனை நடத்தினா்.

அப்போது, தட்சணாமூா்த்தி மகன் காா்த்திக்(27) என்பவா் வீட்டின் பின்புறத்தில், 5 லிட்டா் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்ததை போலீஸாா் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். இந்த சாராயம் விற்பனை செய்வதற்கு ஆந்திராவில் இருந்து சனிக்கிழமை இரவு கடத்தி வரப்பட்டது விசாரணையில் போலீஸாருக்கு தெரிய வந்தது. தொடா்ந்து கனகம்மாசத்திரம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்தனா்.