ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா் கைது

News image

கைது

Updated On :15 பிப்ரவரி 2026, 7:10 pm

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் குமாரவேல் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, கீழ அரண் சாலையில் (இபி சாலையில்) லூா்துசாமி பூங்கா அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், கீழ அரண் சாலை கமலா நேரு நகரைச் சோ்ந்த எஸ். காளிமுத்து (19) என்பதும், போதை மாத்திரையில் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.