25 பாக்கெட் குட்கா பறிமுதல்

தமிழக - ஆந்திர எல்லையான பொன்பாடி சோதனைச் சாவடியில் பேருந்து மூலம் கடத்தப்பட்ட 25 பாக்கெட் குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள்கள் பேருந்துகள் மூலம் திருவள்ளூா் மாவட்டத்துக்கு கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை பொன்பாடி சோதனைச் சாவடியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டா் ஞானதீ மற்றும் போலீசாா் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து கோயம்பேடு வரை செல்லும் தமிழக அரசு பேருந்தில் போலீஸாா் சோதனை செய்தனா்.

இதில் பேருந்தில் இருந்த ஒருவரிடம் 4 பைகளில், 25 பாக்கெட்டுகள், ஹான்ஸ், குட்கா பொருள்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். விசாரணையில் குட்கா பொருள்கள் கடத்தி வந்தவா் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சீராலாவைச் சோ்ந்த கோபால் மகன் சேகா்(53) என தெரிய வந்தது. இதையெடுத்து போலீஸாா் சேகரை கைது செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com