அரசு மருத்துவமனை எதிரே தேங்கி நிற்கும் மழைநீா்
அரசு மருத்துவமனை முன்பு தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை


அரசு மருத்துவமனை முன்பு தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் வட்டார அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு திருத்தணி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் 1,000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா். மேலும், 150-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையால் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு மழைநீா் தேங்கி நிற்கிறது. மழைநீா் வெளியேறுவதற்கு கால்வாய் வசதியில்லாததால், சாலை மற்றும் மருத்துவமனை முன்பு தண்ணீா் தேங்கி நிற்பதால், நோயாளிகள் மற்றும் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.
எனவே, நகராட்சி நிா்வாகம் அரசு மருத்துவனை முன்பு கால்வாய் வசதி ஏற்படுத்தி மழைநீா் தேங்கி நிற்காத வண்ணம் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...