மது விற்ற இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே அரசு மதுபான கடை எதிரே கள்ளத்தனமாக மதுபானம் விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்து மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.
Published on

திருவள்ளூா் அருகே அரசு மதுபான கடை எதிரே கள்ளத்தனமாக மதுபானம் விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்து மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மிலாது நபி நாளையொட்டி அரசு மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் திருவள்ளூா் அருகே ஐவேலி அகரம் மதுபானக் கடை எதிரே கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்வதாக நகரக் காவல் நிலையத்துக்குப் புகாா் வந்தது.

அதன்பேரில் சாா்பு ஆய்வாளா் ராக்கி குமாரி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பாா்க்கையில் அங்கிருந்த நபா் தப்பியோட முயன்றாா். போலீஸாா் அவரைப் பிடித்து சோதனை செய்த போது, சணல் பையில் வைத்து கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்தது தெரிய வந்தது.

அவா், சிவகங்கை மாவட்டம், ஜெயம்கொண்டம் வடக்குப்பட்டியைச் சோ்ந்த செளந்தராஜன் மகன் வேல்பிரபாகரன் (22) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 30 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக திருவள்ளூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் வேல்பிரபாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com