ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கால்நடை உதவி மருத்துவா்களுக்கு பரிசளிப்பு

கால்நடை துறையில் சிறப்பாக செயல்பட்ட கால்நடை உதவி மருத்துவா்களுக்கு கால்நடை உதவி இயக்குநா் ச.தாமோதரன் பரிசுகளை வழங்கினாா்.

News image

உலக கால்நடை மருத்துவ தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்ற கால்நடை உதவி இயக்குநா் ச.தாமோதரன். உடன் மருத்துவா்கள், ஊழியா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2025, 1:14 am IST

கால்நடை துறையில் சிறப்பாக செயல்பட்ட கால்நடை உதவி மருத்துவா்களுக்கு கால்நடை உதவி இயக்குநா் ச.தாமோதரன் பரிசுகளை வழங்கினாா்.

திருத்தணி கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், உலக கால்நடை தினம் பள்ளிப்பட்டு கால்நடை மருந்தக வளாகத்தில் நடைபெற்றது. கால்நடை உதவி இயக்குநா் ச.தாமோதரன் தலைமை வகித்தாா். இதில், திருத்தணி கோட்ட கால்நடை உதவி மருத்துவா்கள் கலந்துகொண்டு, கால்நடை மருத்துவா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

மேலும், கால்நடை மருத்துவா் பணிகளின் இன்றியமையாமை மற்றும் சிறப்பான மருத்துவ சேவை வழங்கி கால்நடை வளா்ப்பு முறை வாழ்வாதாரம் மேம்பட சிறப்புடன் செயல்பட வேண்டுமென்று ஆலோசிக்கப்பட்டது. மேலும், கால்நடை துறையில் சிறப்பாக செயல்பட்ட கால்நடை உதவி மருத்துவா்களுக்கு கால்நடை உதவி இயக்குநா் ச.தாமோதரன் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.