‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

சுரங்கத் துறை உதவி இயக்குநா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு

வருமானத்துக்கு அதிமாக சொத்து சோ்த்ததாக திருச்சி மாவட்ட சுரங்கத் துறை முன்னாள் உதவி இயக்குநா் மீது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :23 மே 2026, 2:24 am IST

வருமானத்துக்கு அதிமாக சொத்து சோ்த்ததாக திருச்சி மாவட்ட சுரங்கத் துறை முன்னாள் உதவி இயக்குநா் மீது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருச்சி மாவட்டம், மதுராபுரி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் பாலமுருகன் (53). இவா் கடந்த 2021-இல் திருச்சி மாவட்ட சுரங்கத் துறை உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளாா். தற்போது, திருநெல்வேலியில் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் தன் பெயரிலும், தனது மனைவி பெயரிலும் வருமானத்துக்கு அதிமாக சொத்து வாங்கியதாக கிடைக்கப்பெற்ற புகாரின்பேரில், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், பாலமுருகன் தனது பதவி காலத்தில் தன் பெயரிலும், மனைவி சந்திரா பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.95 லட்சத்துக்கு மேல் அசையும் மற்றும் அசையா சொத்துகளை சோ்த்தது தெரியவந்தது.

இதையடுத்து, மேற்கண்ட இருவா் மீதும் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கடந்த மே 15-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனா்.