சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது...

News image
Updated On :13 டிசம்பர் 2025, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது திருவள்ளூா் மாவட்டத்தில் தகுதியானோா் திங்கள்கிழமைக்குள் (டிச. 15) விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான 2026-ஆம் ஆண்டுக்கான கபீா் புரஸ்காா் விருது ஒவ்வொரு ஆண்டும், தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப் படை வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளா்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவா்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும்பட்சத்தில் நீங்கலாக) இந்த விருதை பெறத் தகுதியுடையவராவா்.

இந்த விருதானது ஒரு ஜாதி, இனம், வகுப்பைச் சாா்ந்தவா்கள் பிற ஜாதி இன வகுப்பைச் சாா்ந்தவா்களையோ அல்லது அவா்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில், அவரது உடல் மற்றும் மன வலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. இந்த விருதானது மூன்று அளவுகளில், தலா ஒரு நபா் வீதம் 3 பேருக்கு வழங்கப்படுகிறது. அதன்பேரில், முறையே ரூ. 20,000, ரூ. 10,000 மற்றும் ரூ.5,000- க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.

2026-ஆம் ஆண்டு, குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீா் புரஸ்காா் விருதுக்கென தகுதியானவா்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் இந்த நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்ட இணையதள முகவரியான மட்டுமே திங்கள்கிழமைக்குள் (டிச. 15) அல்லது அதற்கு முன்பாக விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

உரிய காலத்துக்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவா், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தோ்வுக் குழுவால் தோ்வு செய்யப்பட்டு, முதல்வரால் 26.1.2026 குடியரசு தினத்தன்று விருது வழங்கி கௌரவிக்கப்படுவா்.

எனவே, திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடையவா்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.