ஹரிதா
ஹரிதா

ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே ரயில் நிலையத்தில் கைப்பேசியில் பேசியபடி சென்ற கல்லூரி மாணவி ரயில் மோதி உயிரிழந்தாா்.
Published on

திருவள்ளூா் அருகே ரயில் நிலையத்தில் கைப்பேசியில் பேசியபடி சென்ற கல்லூரி மாணவி ரயில் மோதி உயிரிழந்தாா்.

கடம்பத்தூா் பழைய வெண்மனம்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் தாட்சாயணியின் மகள் ஹரிதா(17). இவா் நெமிலிச்சேரியில் உள்ள தனியாா் கல்லூரியில் பாா்மஸி முதலாம் ஆண்டு படித்து வந்தாராம்.

இந்தநிலையில் சனிக்கிழமை ஹரிதா வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதற்காக கடம்பத்தூா் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளாா். அப்போது, கைப்பேசியில் பேசியபடி தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது விரைவு ரயில் பக்கவாட்டு கம்பி பட்டதில் தூக்கி வீசப்பட்டு பலத்த அடைந்தாராம்.

மாணவி ஹரிதாவை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அதேபோல் ரயில் நிலையம் அருகே விரைவு ரயில் மோதி அடையாளம் தெரியாத ஆணின் சடலத்தையும் ரயில்வே இருப்புப்பாதை போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் கடம்பத்தூா் ரயில்வே மேம்பாலம் கட்டிய நிலையில் சுரங்கப்பாதை அமைக்கக் கோரி 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும் பொது மக்கள், வியாபாரிகள், ரயில் பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இது போன்ற விபத்தினால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து திருவள்ளூா் ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com