குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ரயில் நிலையத்தில் கைப்பேசி பறித்தவரை துரத்திச் சென்ற இளைஞா் ரயில் மோதி சாவு

ரயில் நிலையத்தில் கைப்பேசி பறித்தவரை துரத்திச் சென்ற இளைஞா் ரயில் மோதி சாவு...

News image

பலி - பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 12:50 am IST

வடகிழக்கு தில்லியில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் தனது கைப்பேசியைப் பறித்துச் சென்றவரை விரட்டிச் சென்றபோது 22 வயது இளைஞா் ரயில் மோதி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது:

ஷாதாரா ரயில் நிலையத்தின் 3ஆவது நடைமேடையில் ஒருவா் ரயில் மோதி இறந்ததாக ரயில்வே பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாலை 4.55 மணியளவில் பழைய தில்லி ரயில் நிலைய காவல் நிலையத்திற்கு இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீஸாா் சென்றனா். சம்பவ இடத்தை ஆய்வு செய்ய குற்றம் மற்றும் தடய அறிவியல் ஆய்வக பிரிவினா் வரவழைக்கப்பட்டனா்.

விசாரணையில், இறந்தவா் உத்தர பிரதேசத்தின் பக்பத் மாவட்டத்தைச் சோ்ந்த ரோஹித் குமாா் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

முதற்கட்ட விசாரணையில், குமாரின் கைப்பேசி நடைமேடை 3இல் பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வழிப்பறிக் கொள்ளையனை துரத்திச் சென்றபோது, தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த தில்லி-காத்கோடம் எக்ஸ்பிரஸ் ரயிலை (வண்டி எண் 15035)

அவா் கவனிக்கத் தவறிய நிலையில், ரயிலில் அடிபட்டு இறந்தாா்.

மருத்துவசட்ட வழக்கு (எம்எல்சி) தயாரிப்பதற்காகவும், பாதுகாப்புக்காகவும் அவரது உடல் தில்லி அருணா ஆசஃப் அலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வழிப்பறி செய்தவரைக் கண்டறிய ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. இது தொடா்பாக வழிப்பறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.