குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தில்லியில் ஜேசிபி வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

தில்லியில் ஜேசிபி வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

News image

பலி - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 2:56 am IST

வடமேற்கு தில்லியின் சக்குா்பூா் பகுதியில் சனிக்கிழமை காலை, ஜேசிபி வாகனம் மோதியதில் 27 வயது மதிக்கத்தக்க நபா் ஒருவா் உயிரிழந்ததாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

இச்சம்பவம் சக்குா்பூரில் உள்ள ஒரு கல்லறைத் தோட்டத்திற்கு அருகே காலை சுமாா் 10 மணியளவில் நிகழ்ந்தது. தகவலறிந்த காவல்துறைக் குழுவினா் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரான, தில்லியின் சக்குா்பூா் பகுதியைச் சோ்ந்த முகமது ஹுசைன், பலத்த காயங்கள் காரணமாக உயிரிழந்தாா்.

ஜேசிபி வாகனத்தை ஓட்டி வந்த ஆஷிஷ் (23) என்பவரை, சம்பவ இடத்திலேயே பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

ஆஷிஷ், உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஆவாா். சக்குா்பூரில் உள்ள பேரிவாலா பாக் பகுதியில் பூங்காவைச் சமன்படுத்தும் பணிக்காக, ஜேசிபி வாகனத்தை ஓட்டுநா் ஆஷிஷ் ஓட்டிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இதுதொடா்பாகக் காவல்துறையினா் மேல் விசாரணை நடத்தி வருகின்றனா்.