பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் புதன்கிழமை இறந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 5:19 am IST

கந்தா்வகோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் புதன்கிழமை இறந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை வட்டத்தைச் சோ்ந்த குப்பையன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அரசகுட்டி மகன் செந்தில் (44). மனநிலை பாதிக்கப்பட்ட இவா் கந்தா்வகோட்டையை அடுத்த துருசுப்பட்டி கிராமத்திலுள்ள தனது சகோதரி வீட்டில் சில நாள்களாகத் தங்கியிருந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற இவரை உறவினா்கள் தேடிவந்த நிலையில் துருசுப்பட்டி- பிசானத்தூா் சாலையில் சோலாா் நிறுவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி செந்தில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின்பேரில் கந்தா்வகோட்டை போலீஸாா் செந்திலில் உடலைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.