நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 11:24 pm IST

நாட்டறம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் வீராகவுண்டனூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா(57) விவசாயி. இவா் கடந்த 19-ஆம் தேதி சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் வெலகல்நத்தம் பெட்ரோல் பங்க் எதிரே இருசக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை ராஜா சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.