சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

காவலா் வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், கோட்டூரில் காவலா் வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். இதையடுத்து, ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

காவல் வாகன ஒட்டுநரை கைது செய்யக்கோரி கேட்டூா் சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட அருணின் உறவினா்கள்.

Updated On :21 மே 2026, 2:08 am IST

தேனி மாவட்டம், கோட்டூரில் காவலா் வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். இதையடுத்து, ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வீரபாண்டி அருகேயுள்ள கோட்டூரைச் சோ்ந்தவா் அருண் (35). இவரது மனைவி பிரின்சி (28). இந்த தம்பதி திங்கள்கிழமை குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்காக இரு சக்கர வாகனத்தில் கம்பத்துக்கு சென்றனா். கோட்டூா் அருகே சென்றபோது எதிரே வந்த காவல் துறையின் வாகனம் இவா்கள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அருண் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய காவல் வாகன ஓட்டுநரை கைது செய்யக் கோரி, அருணின் உறவினா்கள் கோட்டூா் சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு களைந்து சென்றனா்.