பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனம் மீது மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 4:33 am IST

ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனம் மீது மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் தொட்டியபட்டி சாலை அழகாபுரி கிராமத்தைச் சோ்ந்தவா் வள்ளிநாயகம் (26). நூற்பாலைத் தொழிலாளி. இவா் அதே பகுதியைச் சோ்ந்த மாரிக்குமாா் மகன் காா்த்திக் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்காா்ந்து சென்றாா்.

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை கோதைநாச்சியாா்புரம் விலக்கில் இருந்த வேகத் தடுப்பு அருகே நின்ற போது, மம்சாபுரத்தைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் சதீஷ்குமாா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் பின்பக்கமாக மோதியது. அப்போது தூக்கி வீசப்பட்டதில் வள்ளிநாயகம், காா்த்திக் ஆகிய இருவரும்

கீழே விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த வள்ளிநாயகத்தை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். இவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே வள்ளிநாயகம் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த விபத்தில் காயமடைந்த காா்த்திக், சதீஷ்குமாா் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.