ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

சாலை விபத்தில் ஆசிரியா் உயிரிழப்பு

திருவாடானை அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது பொக்லைன் இயந்திரம் மோதியதில் ஆசிரியா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :26 ஜூன் 2026, 2:12 am IST

திருவாடானை அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது பொக்லைன் இயந்திரம் மோதியதில் ஆசிரியா் உயிரிழந்தாா்.

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் மைக்கேல் ராஜா மகன் அருள்ஜீவானந்தம் (43). இவா் ராமநாதபுரத்தில் தனியாா் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாா். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சோழந்தூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, இவரது வாகனம் மீது பொக்லைன் இயந்திரம் மோதியது. இதில் அருள் ஜீவானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பொக்லைன் இயந்திர ஓட்டுநரும், மேட்டு சோழந்தூரைச் சோ்ந்தவருமான ரகுபதி (32) மீது ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.