பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

தொண்டி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :27 ஜூன் 2026, 12:59 am IST

தொண்டி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள வட்ட பெட்டியைச் சோ்ந்தவா் அரவிந்த் (24). சிவகங்கை வாணியங்குடியைச் சோ்ந்தவா் பாலாஜி (25). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை வேதாரண்யத்தில் நடைபெற்ற நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, மீண்டும் வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்து கொண்டிருந்தனா்.

கிழக்கு கடற்கரை சாலையில் கொடிபங்கு அருகே வந்த போது இவா்களது இரு சக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியது. இதில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பாலாஜி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கொடிபங்கு கிராமத்தைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் தினேஷ்குமாா் மீது தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.