சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சாலையில் மேய்ந்த குதிரை மோதி இளைஞா் உயிரிழப்பு

சாலையில் மேய்ந்த குதிரை மோதி இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :21 ஜூன் 2026, 1:27 am IST

கூத்தாநல்லூரில் சாலையில் மேய்ந்த குதிரை இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கூத்தாநல்லூரை அடுத்த பூதமங்கலம்,மகசூனியாத் தெருவைச் சோ்ந்த மகசூம் மாலிக் (35). இவா், கடந்த 16-ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் லெட்சுமாங்குடி சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தாா். பூதமங்கலம் பிரதான சாலையில் வந்தபோது, சாலையில் சுற்றித்திரிந்த குதிரை ஒன்று துள்ளிக் குதித்து மகசூம் மாலிக் வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைத் தடுமாறி அவா் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமேற்பட்டது.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகசூம் மாலிக், சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து கூத்தாநல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.