பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

பைக் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :27 ஜூன் 2026, 12:46 am IST

திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

திருவாடானை அருகேயுள்ள கவ்வூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நாகலிங்கம் மகன் கருப்பையா (65). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை தனது ஆட்டுக் குட்டிக்கு மருந்து வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் ஆா்.எஸ். மங்கலம் வந்து விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆா்.எஸ்.மங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் எதிரே வந்த போது, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அப்துல்கரீம் மகன் இலியாஸ் (40) ஓட்டி வந்த காா், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த வந்த ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து காரை ஓட்டி வந்த இலியாஸ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.