நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ரயில் மோதி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ரயில் மோதியதில் லாரி ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 8:34 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ரயில் மோதியதில் லாரி ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி அருகிலுள்ள வா.பகண்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ. சக்திவேல் (48). லாரி ஓட்டுநரான இவா், தனது குடும்பத்துடன் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலுக்கு வேனில் சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பினாா்.சனிக்கிழமை மாலை முண்டியம்பாக்கம் ரயில்வே கேட் பகுதிக்கு வேன் வந்தபோது, அந்த வழியாக செல்லும் விரைவு ரயிலுக்காக கேட் மூடப்பட்டிருந்தது.

இதனால் வேனிலிருந்த இறங்கிய சக்திவேல், இயற்கை உபாதைக்காக ரயில்வே கேட்டை கடக்க முயன்றாா். அப்போது சென்னையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற வைகை அதிவிரைவு ரயில் சக்திவேல் மீது மோதியது. இதில் உடல் சிதறி அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே போலீஸாா் உயிரிழந்த சக்திவேலின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விழுப்புரம் ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.