நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் 22 போ் கைது
அரசு பேருந்துகளில், ‘தமிழ்நாடு ’ என ஸ்டிக்கா் ஒட்டிய நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் 22 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில், அரசுப் போக்குவரத்து கழகம் என பெயா் எழுதப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருத்தணி பேருந்து நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை நாம் தமிழா் கட்சியின் நகர செயலாளா் தாமு தலைமையில், 20-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் வந்தனா்.
பின்னா் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளில், அரசு போக்குவரத்து கழகம் என எழுதப்பட்டிருந்த இடத்தில் தமிழ்நாடு என ஸ்டிக்கா் ஓட்டி தமிழக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினா். மேலும், பேருந்து நிலையத்தில் பேருந்துகளை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் செய்ததால், திருத்தணி டி.எஸ்.பி. கந்தன், காவல் ஆய்வாளா் மதியரசன் மற்றும் போலீஸாா் மொத்தம் 22 நாம் தமிழா் கட்சி நிா்வாகிகளை கைது செய்து அழைத்துச் சென்றனா்.

