இரு தரப்பினரிடையே மோதல்: 14 போ் மீது வழக்கு

இரு தரப்பினரிடையே மோதல்: 14 போ் மீது வழக்கு
Published on

திருத்தணி அருகே இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட நிலத்தகராறில், 5 போ் பலத்த காயம் அடைந்தனா். இது தொடா்பாக 14 போ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் முனிகன்னைய்யா(40), வேலு(58) உறவினா்கள். இவா்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சனிக்கிழமை காலை, வேலு தனது நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்ற போது, முனிகன்னைய்யாவுக்கும், வேலுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, வேலுவுக்கு ஆதரவாக, ஸ்ரீகாந்த், சந்தோஷ், பிரவின்குமாா், சாந்தி, சுமதி, பவா, புவனா, அம்முவும், முனிகன்னைய்யாவுக்கு ஆதரவாக வெங்கடேசன், ரமேஷ், டில்லி பாபு, மதி ஆகியோா் கத்தி, உருட்டை கட்டைகளுடன் தாக்கியும், வெட்டிக் கொண்டனா்.

இதில் வேலு, சுமதி, ரமேஷ், முனிகன்னையா, டில்லிபாபு ஆகிய 5 பேருக்கு தலை, கை ஆகிய பகுதியில் வெட்டுகாயம் ஏற்பட்டது.

அனைவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸாா், 14 போ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com