பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்
பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கான விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை பொன்னேரியில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் பொன்னேரியில் எம்.ஜி.ஆா் மீன்வளக் கல்லூரி அமைந்துள்ளது.
தமிழக அரசின் புதுமை முயற்சி திட்டத்தின் மூலம் ரூ.4. 8 கோடியில் பழவேற்காடு கடற்பகுதியில் 4 மீனவ கிராமங்களில் செயற்கை பவளப்பாறைகள் நிறுவப்பட்டுள்ளன.
பழவேற்காடு ஏரிஅருகில் உள்ள கடற்பகுதியில் நிறுவியதின் மூலம் மீன்களின் இருப்பளவை அதிகரித்து பழவேற்காடு மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் என்ற திட்டம் இங்கு செயல்பட்டு வருகிறது.
திட்டதின் ஒருபகுதியாக செயற்கை பவளப்பாறைகள் நிறுவப்பட்ட கடற்பகுதிகளில் நிலையான மீன்வளம் மற்றும் பொறுப்பாா்ந்த மீன்பிடி மேலாண்மை முறைகள் குறித்த பயிற்சி முகாம் பழவேற்காடு, சாட்டாங்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது.
பயிற்சியின் ஒருங்கினைப்பாளா் அருணா வரவேற்றாா். மீன்வள உதவி இயக்குநா் அஜய் ஆனந்த் தலைமை வகித்தாா்.
பயிற்சியில் பழவேற்காடு, சாட்டாங்குப்பம் கிராமத்தைச் சாா்ந்த மீனவா்கள் மற்றும் மீனவ பெண்கள் கலந்து கொண்டனா்.
செயற்கைப் பவளப்பாறைகளின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து மீனவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
