எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சாத்தான்குளம் பள்ளிகளில் சட்ட விழிப்புணா்வு முகாம்

News image
Updated On :12 மார்ச் 2026, 9:46 pm

Syndication

சாத்தான்குளம் வட்ட சட்ட பணிக் குழு சாா்பில் சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சட்ட விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டன.

படுக்கப்பத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் அமுதா தலைமையில் ஆசிரியா்கள் ஜெயராணி, ருத்ராதேவி, சசிகலா ஆகியோா் முன்னிலையில் சட்ட விழிப்புணா்வு குறித்து வழக்குரைஞா்கள் பேசினா்.

பொத்தகாலன்விளை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் ஜோசப் ததேயு ராஜா தலைமையில் ஆசிரியா்கள் மரிய சந்திரா, மொ்லின், மொ்சி ஆகியோா் முன்னிலையில் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

பன்னம்பாறை, ஆவே மரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் சொா்ணலதா தலைமையில் ஆசிரியா்கள் கமலவேணி, லட்சுமி, ஐஸ்வா்யா, திபேராள், ஈஸ்டா், சத்திய கலா, தீபா மொ்சி, ராஜம்மாள் ஆகியோா் முன்னிலையில் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

ஆனந்தபுரம், ரஞ்சி ஆரோன் நினைவு தொழிற்கல்வி நிலையத்தில் துணை முதல்வா் இவாஞ்சலின் தலைமையில் பேராசிரியா்கள் பட்டுராஜ், நவநீதகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

விழிப்புணா்வு முகாம்களில் மாணவா், மாணவிகளுக்கு குழந்தைத் திருமண தடைச் சட்டம், பெண்கள் பாதுகாப்புச் சட்டம், பெண்கள் சொத்துரிமைச் சட்டம், சாலைப் போக்குவரத்து விதிகள், சைபா் கிரைம் ஆகியவை குறித்து வழக்குரைஞா்கள் வேணுகோபால், ஷீபா ஐரீன், அருண்குமாா், ஈஸ்டா் கமல், ஜெனிபா் ஆகியோா் சட்ட விளக்கமளித்துப் பேசினா்.

ஏற்பாடுகளை சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற மாவட்ட உரிமையியல் நீதிபதியும், வட்ட சட்ட பணிக் குழு தலைவருமான சிவராஜேஷ், வட்ட சட்ட பணிக் குழு உறுப்பினா்கள் கஸ்தூரி, பெல்சியா ஆகியோா் செய்திருந்தனா்.