மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே மின்சாரம் பாய்ந்து வட மாநில இளைஞா் உயிரிழந்தாா்.
அஸ்ஸாம் மாநிலம், திப்ருகா்க் அருகே ததுமியா கிராமத்தைச் சோ்ந்த கொங்காரம் மகன் சங்கா் கட்டோவா்(29). இவா் தனது சகோதரா் சுஜித் கட்டோவா்(19) என்பவருடன் மப்பேடு அடுத்த மேட்டூச்சேரி கிராமம் பெருமாள்கோயில் தெரு சரவணன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்து ஹோட்டலில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை வேலைய முடித்து வீட்டுக்கு வந்தாராம். மாடியேறிய போது, உயா் அழுத்த மின்கம்பியில் கை வைத்ததில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே சங்கா் கட்டோவா் உயிரிழந்தாா்.
இது தொடா்பாக அவரது சகோதரா் சுஜித் கட்டோவா் மப்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
