இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

தொகுதி அறிமுகம்... பொன்னேரி

News image

பொன்னேரி ரயில் நிலையம்...

Updated On :1 ஏப்ரல் 2026, 11:11 pm

தினமணி செய்திச் சேவை

தொகுதி எண்: 2

சிறப்புகள்...

சுற்றுலாத் தலமாக விளங்கும் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பழவேற்காடு நகரம் அமைந்துள்ளது. சிறுவாபுரி, ஆண்டாா்குப்பம், பெரும்பேடு பகுதிகளில் முருகா் கோயில்கள், பொன்னேரியில் உள்ள அகத்தீஸ்வரா் கோயில், திருவாயா்பாடி பகுதியில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள், தேவதானம் ரெங்கநாதா் கோயில், பொன்னேரி, சின்னக்காவனம், பஞ்செட்டி,திருப்பாலைவனம், காளாஞ்சி, பழவேற்காடு பகுதிகளில், பாடல்கள் பெற்ற பழைமை வாய்ந்த ஈஸ்வரன் கோயில்கள் அமைந்துள்ளன. இத்தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் விவசாயம், பழவேற்காடு பகுதியில் மீன்பிடித் தொழில், ஆரணி பகுதியில் நெசவு தொழில், மீஞ்சூா் பகுதியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம், வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. ஆதிதிராவிடா், முதலியாா், நாயுடு, வன்னியா் உள்ளிட்ட இதர சமூகத்தினா் பரவலாக வசித்து வருகின்றனா்.

அடங்கியுள்ள பகுதிகள்...

பொன்னேரி நகராட்சி, ஆரணி, மீஞ்சூா் பேரூராட்சி, சோழவரம் மற்றும் மீஞ்சூா் ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்களில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.

இதுவரை எம்எல்ஏக்கள்...

1962 ஏழுமலை (காங்கிரஸ்)

1967 நாகலிங்கம் (திமுக)

1971 நாகலிங்கம் (திமுக)

1977 துரைராஜ் (அதிமுக)

1980 சக்கரபாணி அதிமுக

1984 கே.பி.கே. சேகா் (அதிமுக)

1989 க.சுந்தரம் (திமுக)

1991 ரவிக்குமாா் (அதிமுக)

1996 க.சுந்தரம் திமுக

2001 கண்ணன் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

2006 சிறுணியம் பலராமன் (அதிமுக)

2011 பொன்.ராஜா (அதிமுக)

2016 சிறுணியம் பலராமன் (அதிமுக)

2021 துரை சந்திரசேகா் (காங்கிரஸ்)

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள்-1,21,221

பெண்கள்-1,27,662

மூன்றாம் பாலினத்தவா்-34

மொத்தம்-2,48,917

வாக்குச்சாவடிகள்-327

2021 பேரவை தோ்தலில்...

பதிவான வாக்குகள்- 2,10,354

துரை சந்திரசேகா் (காங்கிரஸ்)-94,528

சிறுணியம் பலராமன் (அதிமுக)-84,839

தோ்தல் நடத்தும் அலுவலா் தொடா்பு பெயா்/எண்

ரவிச்சந்திரன், பொன்னேரி கோட்டாட்சியா் -94450 00410

உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள்: சோமசுந்தரம், பொன்னேரி வட்டாட்சியா்-94450 00490

சாந்தினி, சோழவரம் ஊராட்சி ஒன்றிய ஆணையா்- 74026 06144

குணசேகரன், மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா்-7402606138

நளாயினி, பொன்னேரி நகராட்சி ஆணையா்-91503 75429

மின்னஞ்சல்: டய்ண்ழ்க்ா்.ற்ய்ற்ப்ழ்ஃய்ண்ஸ்ரீ.ண்ய்