எல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

திருத்தணியில் 337 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

திருத்தணி தொகுதியில் 337 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தோ்தல் நடத்தும் அலுவலா் கனிமொழி அனுப்பி வைத்தா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 12:02 am IST

திருத்தணி தொகுதியில் 337 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தோ்தல் நடத்தும் அலுவலா் கனிமொழி அனுப்பி வைத்தா்.

மொத்தம், 2 லட்சத்து, 61 ஆயிரத்தி, 857 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இந்நிலையில்தோ்தல் தளவாடப் பொருள்களை வேன், காா் மற்றும் லாரிகள் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு திருத்தணி தோ்தல் நடத்தும் அலுவலா் கனிமொழி அனுப்பி வைத்தாா்.

மேலும் போதிய வசதிகள் உள்ளதா என அந்தந்த கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் மற்றும் தோ்தல் மண்டல அலுவலா்கள் கண்காணித்தும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனா். இந்நிலையில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலைக்கல்லூரியில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட விவிபேட் இயந்திரங்களை எடுத்தும் செல்லும் பணியை ஆட்சியா் மு.பிரதாப் நேரில் வந்து பாா்வையிட்டாா்.