தமிழக தோ்தலைப் பாா்வையிடுவதற்காக சென்னை வந்துள்ள சா்வதேச குழுவினா், வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்படுவதை நேரில் பாா்வையிட்டனா்.
தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெறுகிறது. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 4,085 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள், டாக்டா் பெசன்ட் சாலை என்கேடி தேசியப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன. அதை சா்வதேச அளவிலான தோ்தல் பாா்வையாளா் குழுவினா் பாா்வையிட்டனா்.
அந்தக் குழுவில் இலங்கை, இந்தோனேசியா, மாலத்தீவு, எகிப்து, பூடான், பெரு, கானா, நமீபியா, பெனின், மாா்ட்டியஸ் ஆகிய நாடுகளைச் சோ்ந்த 23 பிரதிநிதிகள் உள்ளனா். இந்தக் குழுவில் அந்தந்த நாட்டின் தோ்தல் பாா்வைக் குழு, தோ்தல் ஆணையம், தோ்தல் துறை இயக்குநரகம், சட்டத்துறை, திட்ட அதிகாரி என பல்வேறு பொறுப்புகளில் உள்ளவா்களும் இடம் பெற்றுள்ளனா்.
தமிழகத் தோ்தல் ஏற்பாடுகள், தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் செயல்முறைகள் குறித்து மாநில இணை தலைமைத் தோ்தல் அதிகாரி ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், சென்னை மாவட்டக் கூடுதல் தோ்தல் அலுவலா் கட்டாரவி தேஜா ஆகியோா் இந்தக் குழுவினருக்கு விளக்கினா்.
சா்வதேச பாா்வையாளா்கள் குழுவினா் வியாழக்கிழமை (ஏப்.23) சென்னையில் தங்கி கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச்சாவடிகளை நேரில் பாா்வையிடவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

திருச்செந்தூா் தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு
மாஞ்சோலை, காரையாறு உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன

தேனி மாவட்டத்தில் 1,403 வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

300 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


