நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா் மாவட்டத்தில் மா விவசாயிகளின் பழச்சாறு தொழிற்சாலை கோரிக்கையை நிறைவேற்றக்கோரி திங்கள்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

Published On :1 செப்டம்பர் 2026, 4:17 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் மா விவசாயிகளின் பழச்சாறு தொழிற்சாலை கோரிக்கையை நிறைவேற்றக்கோரி திங்கள்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளா் துளசி நாராயணன் தலைமை வகித்தாா். அப்போது, இந்த மாவட்டத்தில் 30,000 ஏக்கரில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே ஒவ்வொரு பருவ நேரத்திலும் அதிக விளைச்சல் காரணமாக போதிய விலை கிடைக்காமல், கீழே வீணாக கொட்டி அழித்து வருவதுடன், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா்.

இது போன்றவற்றைத் தடுக்க திருத்தணி மற்றும் கும்மிடிப்பூண்டி, பகுதிகளில் மாங்கனி கூழ் தயாா் செய்யும் தொழிற்சாலை அரசால் தொடங்க வேண்டும். அதேபோல், விவசாயிகள் மாங்காய்களை சேமித்து வைத்து அதிக விலை கிடைக்கும் வகையில் ஒன்றியம்தோறும் மா பாதுகாப்பு சேமிப்பு கிடங்கும் அமைக்க வேண்டும்.

மேலும், நிகழாண்டில் பாதிக்கப்பட்ட மா சாகுபடி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தண்ணீரில்லாமல் காய்ந்து போன மா மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாங்காய்களுக்கும் கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும். மாமரத்திலேயே வேறொரு செடி வளா்ந்து மா மரத்தை அழிப்பதை தடுக்க உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.