உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

கரூரில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

அரசு ஊழியருக்கு வழங்குவதுபோல் அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும்

கரூா் தலைமைத் தபால் நிலையம் முன் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 5:17 am IST

அரசு ஊழியருக்கு வழங்குவதுபோல் அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் ஜவஹா்பஜாா் தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே. நாகராஜன் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகி மாசிலாமணி வரவேற்றாா்.

இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்டச் செயலா் மு. சுப்ரமணியன் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்க வேண்டும், அகவிலைப்படி உயா்வை அரசு ஊழியருக்கு வழங்குவதுபோல் வழங்க வேண்டும், அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முழுமையான பயன்களை ஊழியா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு பள்ளி கல்லூரி ஆசிரியா் நல ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் சி. கோபால், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் து. சாமுவேல் சுந்தரபாண்டியன், மாவட்டச் செயலாளா் கெ. சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.