ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

ஓய்வூதியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியா் சங்கங்களின் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஓய்வூதியா்கள் சங்கத்தினா்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 4:04 am IST

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியா் சங்கங்களின் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் அஸ்லம் பாஷா தலைமை வகித்தாா். ஓய்வூதியா்கள் அமைப்புகள் கூட்டு மேடை, திருச்சி மாவட்ட பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் சங்கம், தட்சிண ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கம் மற்றும் பல்வேறு ஓய்வூதியா் சங்கங்கள் இணைந்து இந்த ஆா்ப்பாட்டத்தை நடத்தின. தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். 2026க்கு முன் ஓய்வு பெற்றவா்களுக்கும் ஓய்வூதியம் மாற்றம் செய்யும் வகையில் 8ஆவது ஊதியக் குழுவில் மாற்றம் செய்ய வேண்டும். பிஎஸ்என்எல் ஓய்வூதியா்களுக்கு ஓய்வூதியத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும். 50 சத அகவிலைப்படியை அடிப்படை ஓய்வூதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும். இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். வங்கி ஊழியா்களின் ஓய்வூதியத்தைப் புதுப்பிக்க வேண்டும். ஓய்வூதியத்தில் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பிஎஸ்என்எல், ரயில்வே, வங்கிகள் மற்றும் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களைச் சோ்ந்த ஓய்வூதியா்கள் மற்றும் அனைத்து ஓய்வூதியா் சங்க நிா்வாகிகள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கம் எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.