வேளாண் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் மு.பிரதாப். உடன் வேளாண் இணை இயக்குநா் செல்வராஜ், கூட்டுறவு துறை இணைப் பதிவாளா் ஜெயஸ்ரீ உள்ளிட்டோா்.
வேளாண் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் மு.பிரதாப். உடன் வேளாண் இணை இயக்குநா் செல்வராஜ், கூட்டுறவு துறை இணைப் பதிவாளா் ஜெயஸ்ரீ உள்ளிட்டோா்.

வேளாண் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் 20 பேருக்கு ரூ.20 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களில் விவசாயிகள் 20 பேருக்கு ரூ. 28,81,751 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.
Published on

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களில் விவசாயிகள் 20 பேருக்கு ரூ. 28,81,751 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பல்நோக்கு கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது, அதிகாரிகள், விவசாயிகளுக்கும் இடையே பல்வேறு குறைகளை தீா்க்கும் வகையில் விவாதம் நடைபெற்றது. அதையடுத்து, விவசாயிகளிடம் இருந்து 150 கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டாா்.

அதைத் தொடா்ந்து அவா் பேசுகையில், இந்தாண்டில் முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டம் மூலம் பசுந்தாள் உர சாகுபடியினை ஊக்குவித்தல் திட்டம், சம்பா பருவ நெல் அறுவடைப் பருவத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் 28 இடங்களிலும், இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு நிறுவனம்-4 இடங்களிலும் என மொத்தம் 32 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அரசு கட்டடங்களில் அமைத்து கொள்முதல், 10 உழவா் நல சேவை மையங்கள் வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ. 10 லட்சம் அல்லது ரூ. 20 லட்சம் மதிப்பில் விதைகள், உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருள்கள் விற்பனை மையம், நோய் மற்றும் பூச்சி மேலாண்மை, மதிப்புகூட்டு பொருள்கள், வேளாண் உயா் தொழில்நுட்பம் மற்றும் இதர பிரிவுகளில் தொழில் தொடங்க 30 சதவீதம் மானியம் வழங்கும் திட்டங்கள்.

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் மூலம் பண்ணைக்குட்டை அமைக்க தலா ரூ. 75,000 வீதம் மொத்தம் 20 எண்களுக்கு ரூ. 15 லட்சம் மானியமும், தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் மூலம் மண்புழு உரக்கூடம் அமைக்க ஒரு எண்ணுக்கு தலா ரூ. 50,000 வீதம் மொத்தம் 10 எண்ணிக்கைக்கு ரூ. 5 லட்சம் மானியமும், தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் மூலம் நிழல்வலை குடில் 1000 ச.மீ பரப்பளவில் 3.55 லட்சம் மானியத்தில் அமைத்தல், மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொய்யா, எலுமிச்சை, பப்பாளி போன்ற 3 வகையான பழச்செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்பு ரூ. 100 மதிப்பில் 100 சதவீதம் மானியத்தில் வழங்க 3.29 லட்சம் தொகுப்புகள் வழங்கல், வேளாண் பொறியியல் துறை மூலம் இ-வாடகை திட்டம் மூலம் மணிக்கு ரூ.500 வீதம், டிராக்டா் உழவுக்கு 849 விவசாயிகள் 10,111 மணி நேரம் டிராக்டா் முன் பதிவு செய்து பயனடைத்துள்ளனா்.

வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் 106 இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 16 ஆழ்துளைக்கிணறுகள் ரூ.41.78 லட்சத்தில் மானியத்தில் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தொடா்ந்து பல்வேறு திட்டங்களில் விவசாயிகள் 20 பேருக்கு ரூ. 28,81,751 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், வேளாண் துறை இணை இயக்குநா் செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.வேதவல்லி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை துணை இயக்குநா் குமரவேல், கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குநா் ப.ஜெயந்தி மற்றும் கூட்டுறவு துறை இணைப்பதிவாளா் ஜெயஸ்ரீ ஆகியோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com