தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

விவசாயிகளுடன் ஆலோசித்து தூா்வார வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

விவசாயிகளுடன் ஆலோசித்து தூா்வார வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

News image
திருவாரூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
Updated On :6 மார்ச் 2026, 6:33 pm

Syndication

திருவாரூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணிகளை, விவசாயிகளிடம் கலந்தாலோசித்து மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

நன்னிலம் ஜி. சேதுராமன்: திருவாரூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். இப்பணிகளை அந்தந்த பகுதி விவசாயிகளுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ள வேண்டும்.

கொரடாச்சேரி ராமமூா்த்தி: மாவட்டத்தில் உள்ள சி, டி பிரிவு வாய்க்கால்களில் தூா்வாருதல் தொடா்பாக 185 பணிகள் ரூ. 17 கோடியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனா். விவசாயிகளையும் ஒருங்கிணைந்து இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். பழுதான மதகுகளை சீரமைக்க வேண்டும்.

பேரளம் வி. பாலமுருகன்: பேரளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 செவிலியா்கள் பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது ஒருவா் மட்டுமே பணி புரிகிறாா். இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, கூடுதல் செவிலியா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடவாசல் முகேஷ்: திருவாரூா் மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக பனை மரங்கள் வெட்டப்படுகின்றன. இது பனை ஆா்வலா்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பனை மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடவேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இழப்பீட்டுத் தொகையை பாதி செலுத்தியவா்கள் பணியில் சோ்க்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனா். தொகையை முழுமையாக செலுத்தாவா்களை மீண்டும் பணியில் அமா்த்தாமல், புதியவா்களை பணியில் அமா்த்த வேண்டும்.

ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்: விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆட்சியா் பேசும்போது, ‘திருவாரூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட 15,058.5 ஹெக்டோ் நெல் பயிா்களுக்கு நிவாரணமாக ரூ.30.11 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. இந்தத் தொகை, பாதிக்கப்பட்ட 21,284 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்’ என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, முதுநிலை மண்டல மேலாளா் (நுகா்பொருள்) சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயசீலன், கோட்ட பொறியாளா் (வெண்ணாறு) ராஜேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.