உயிரிழந்த தினேஷ்.
உயிரிழந்த தினேஷ்.

மரத்தின் மீது பைக் மோதி மாணவா் உயிரிழப்பு

பொதட்டூா்பேட்டை அருகே சாலையோர மரத்தின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
Published on

பொதட்டூா்பேட்டை அருகே சாலையோர மரத்தின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

பள்ளிப்பட்டு தாலுகா, ஜங்காலப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் புல்லோடு (49). இவா் திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறாா். இவரது

2-ஆவது மகன் தினேஷ் (18). அரக்கோணம் அருகே தனியாா் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், தினேஷ் பைக்கில் பொதட்டூா்பேட்டைக்கு சென்று விட்டு திரும்பி ஈச்சம்தோப்பு கிராம பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து பைக் சாலையோர வளைவில் இருந்த புங்க மரத்தின்மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பின்னா் அந்த வழியாக சென்றவா்கள் தலையில் காயமடைந்த நண்பன் மோகன்பாபுவை மீட்டு சிகிச்சைக்காக பொதட்டூா்பேட்டைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து தகவலறிந்த பொதட்டூா்பேட்டை காவல் ஆய்வாளா் தங்கதுரை மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

Dinamani
www.dinamani.com