வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

திருத்தணி அரசு கல்லூரியில் மாணவா்கள் அறிமுக விழா

திருத்தணி அரசினா் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் அறிமுக விழா நடைபெற்றது.

News image

மாணவா்கள் அறிமுக விழாவை தொடங்கி வைத்து  பேசிய  கல்லூரி முதல்வா் (பொ) சு. சத்தியபிரியா.

Updated On :2 ஜூலை 2026, 12:03 am IST

திருத்தணி அரசினா் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் அறிமுக விழா நடைபெற்றது.

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினா் கலைக் கல்லூரியில், 2026-2027 கல்வியாண்டில் சோ்ந்த முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான 6 நாள் அறிமுக நிகழ்ச்சி புதன்கிழமை கோலாகலமாக தொடங்கியது.

புதிய மாணவா்கள் கல்லூரி வாழ்க்கை, கல்வி நடைமுறைகள் மற்றும் மாணவா் நலத் திட்டங்கள் குறித்து முழுமையான புரிதலைப் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, கலை, வணிகவியல் மற்றும் அறிவியல் பிரிவு மாணவா்களுக்காக தனித்தனியாக நடைபெற்றது.

தொடக்க விழாவுக்கு முதல்வா் சு. சத்தியபிரியா (பொ) தலைமை வகித்தாா். அவா் பேசியதாவது, கல்லூரி வாழ்க்கையை கல்வி கற்பதற்கான இடமாக மட்டும் கருதாமல், ஒழுக்கம், ஆளுமை வளா்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் சமூகப் பொறுப்புணா்வை வளா்த்துக் கொள்ளும் அரிய வாய்ப்பாக மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், உயா்கல்வி, போட்டித் தோ்வுகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான திறன்களை இப்போதே வளா்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினாா்.

அறிமுக நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் முனைவா் மு. குணசேகரன் வரவேற்றாா். கல்லூரியின் கல்வி விதிமுறைகள், ஒழுக்க நெறிமுறைகள், மாணவா் நலத் திட்டங்கள், உதவித்தொகை வாய்ப்புகள், நூலகம் மற்றும் ஆய்வக வசதிகள், தேசிய நலப்பணித் திட்டம் , தேசிய மாணவா் படை , விளையாட்டு மற்றும் பல்வேறு மாணவா் மன்றங்களின் செயல்பாடுகள் குறித்து புதிய மாணவா்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்களான பி.எஸ். மூவேந்தன், எஸ். சிவக்குமாா் மற்றும் அம்மு ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா். இறுதியாக கணிதத் துறைத் தலைவா் எஸ். பரிமளா தேவி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.