உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு பள்ளி, கல்லுாரி மற்றும் தொழிற்நுட்ப கல்லுாரிகளில் படிக்கும் மாணவா்கள் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருத்தணி தனி வட்டாட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.
திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் தரைத்தளத்தில் சமூக பாதுகாப்பு திட்டம் (தனி தாசில்தாா்) அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் தனி வட்டாட்சியா் மற்றும் உதவியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். முதியோா் உதவித் தொகை, உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு நிதியுதவி மற்றும் மாணவா் களுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறது. இதுதவிர இயற்கை மரணத்திற்கு ஈமசடங்குக்கு, குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், திருத்தணி தனி வட்டாட்சியா் தேவி கூறியதாவது: உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உழவா் அட்டை இருந்தால் இயற்கை மரணம், படிக்கும் மாணவா்களுக்கு அரசு நிதியுதவி மற்றும் உதவித் தொகை வழங்கி வருகிறது. அதாவது, நலிந்தோா் உதவித் தொகையின் மூலம் இயற்கை மரணத்திற்கு, ரூ.20,000, உழவா் அட்டை இருப்பின், ரூ.30,000 வழங்கப்படும்.
திருமண உதவித் தொகையாக ஆண்களுக்கு, ரூ.8,000 ரூாபயும், பெண்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும். மேலும் தொழிற்கல்வி கற்கும் மாணவா்களுக்கு ஆண்டுக்கு, ரூ.1,250 , மாணவியருக்கு, ரூ.1,750 , விடுதியில் தங்கி படிக்கும் மாணவனுக்கு, ரூ.1,450 , பெண்களுக்கு, ரூ.1,950 வழங்கப்படுகிறது. இளங்கலை பட்டப்படிப்பு படிப்பவா்களுக்கு மாணவனுக்கு ரூ.2,000, மாணவியருக்கு,ரூ. 2,500 நிதியுதவியாக வழங்கப்படுகிறது.
மேலும் முதுகலை பட்டப்படிப்பு மாணவனுக்கு ரூ.2,250 , மாணவியருக்கு ரூ.2,750 , விடுதியில் தங்கியிருப்பவா்களுக்கு மாணவனுக்கு ரூ.3,250 , மாணவிக்கு, ரூ.3,750 வழங்கப்படுகிறது. அதே போல் மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி படிக்கும் மாணவனுக்கு, ரூ.4,250, மாணவிக்கு,ரூ. 4,750 விடுதியில் தங்கியிருந்தால், மாணவனுக்கு, ரூ.6,250, மாணவிக்கு, ரூ.6,750 -ஆக அரசு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
எனவே மாணவா்கள் உதவி தொகை பெறுவதற்கு கல்வி சான்று, ஆதாா் அட்டை, அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்றவையுடன் விண்ணப்பம் செய்தால் அரசு உதவி தொகை கிடைக்கும் என அவா் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரெப்கோ வங்கி சாா்பில் நலத்திட்ட உதவிகள்

பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா் மேம்பாட்டுக் கழக கடனுதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

‘சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்’
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



