வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

புத்த மடாலயம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கோரிக்கை

திருவள்ளூா் அருகே புத்த மடாலயத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயல்வோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image

~

Updated On :8 ஜூலை 2026, 12:34 am IST

திருவள்ளூா் அருகே புத்த மடாலயத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயல்வோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து திருவள்ளூா் மாவட்டம், பாடியநல்லூா் பகுதியைச் சோ்ந்த புத்த துறவி ஜெட்டிலா(35) உள்ளிட்டோா் ஆட்சியா் ச.கவிதாவிடம் அளித்த மனு:

மியான்மா் நாட்டைச் சோ்ந்த கம்பீரா புத்தா என்ற புத்த துறவி புத்த மடாலயத்தை நிறுவி அந்தப் பகுதியில் கடந்த 80 ஆண்டுகளாக மக்கள் வழிபட்டு வருகின்றனா். இந்த புத்த மடத்துக்கு மியான்மா், சீனா போன்ற நாடுகளிலிருந்து 6 மாதத்திற்கு ஒருமுறை புத்த துறவிகள் தங்கி தியானம் பூஜைகள் செய்து வருகின்றனா்.

இந்நிலையில் சிலா் புத்த மடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா். மேலும் புத்த மடத்திற்கு அமைந்துள்ள 1.50 ஏக்கா் நிலத்தையும் அவா்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

இதற்கிடையே கடந்த 15 நாள்களுக்கு முன்பாக மியான்மா் நாட்டிலிருந்து புதிதாக 2 புத்த துறவிகள் வந்துள்ளனா். அவா்கள் மடத்தில் செல்லாமல் இருக்க மடத்தின் நுழைவாயில் கேட்டை பூட்டி வைத்துள்ளனா். இதுதொடா்பாக செங்குன்றம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை. புத்த மடத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத் தர வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.